Wednesday, January 19, 2011

கருவிலிருந்து .............திரைப்பட விமர்சனம்

கருவிலிருந்து விளம்பர அட்டையே தெளிவாய் படத்தின் கருவைக் காட்டிக் கொடுக்கிறது,
கண் ஒளி  இழந்த மனிதனின் வாழ்க்கையை  வைத்து படம் நகர்கிறது.
ஒரு திரை படத்தின் திரைக்கதை என்பது நான்கு பிரிவுகளைக் கொண்டது ,
1.சம நிலை
2.கலைந்த நிலை
3.போரட்ட நிலை
4.சமரச நிலை

இக்கதையில்  ஒரு குழந்தைப் பிறக்கிறது: அது சம நிலை,கண் ஒளி இழந்ததை அக் குழந்தையின் தாய் அறிகிறாள் அதனால்  அந்த சிறுவன் அனைவராலும் ஒதுக்கப்  படுகிறான் இது கலைந்த நிலை,வாழ்க்கையில் பல போரட்டங்களை சந்திப்பது போரட்ட நிலை: இதுவரை திரைக்கதையின் இலக்கணத்தோடு நகர்ந்த கதையில் ,திடீரென
அவர் எளிதாய் சமரச நிலை அடைகிறார்,,,,இது காட்சிப் பிழை ..

கதையின்  கரு  அருமை.ஆனால் திரைக்கதையை  சரியாக  ஆய்வு  செய்யவில்லை,ஒரு ஜெபத்தினால் ஒருவனின் வாழ்க்கை மாறும் என்பது உண்மை,ஆனால் அது
இயேசுவை ருசி பார்த்தவர்களுக்கு  மட்டுமே விளங்கும்(Non believers), புற ஜாதிகளுக்கு இந்த கதையின் சமரச நிலையை விளங்குவதற்கு வாய்ப்புஇல்லை,
மேலும் வசனங்களில் இயக்குனர் கவனம் செலுத்தவில்லை.கதாபாத்திரத்தின்  தேர்வு அருமை,ஆனால் உடைகளில்   கவனம் செலுத்தவில்லை,குழந்தையின் தாய் 10  வருடங்களுக்குப் பிறகும் அதே உடை தான்  அணிந்து இருந்தாரா ?

(RC Father )பாதர்,போலீஸ் இருவரும் ஒரே ஒரு வசனத்திற்காக தான் வந்தார்களா ? பின்னர் 10 வருடத்திற்குப்பின்  பிட்சை எடுப்பதை தான் போலீஸ் பெருமையாக சொன்னரா ?
இவ்வளவு நாளாக உலகமே விரட்டிய   கண் ஒளி  இழந்த மனிதனைப் பார்த்து ஒரு ரவுடி எப்படி பயந்து ஓட முடியும் ???,இப்படி பல நிர்பந்தக் காட்சிகள் இப்படத்தில் பிரதானமாய் இடம் பிடித்துள்ளன ,  கண் ஒளி  இழந்தவர்களை நல்லவர்களாய் மட்டுமே சித்தரிக்காமல்,அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு ,சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களும் தவறு செய்வார்கள் என்று காட்சிபடுத்தி இருப்பது  அருமை.
                                                                                        
                                                                              வசனங்களில் படத்தின் காலக் கட்டத்தைக் குறிப்பிட்டு  இருப்பது அருமை,ஆனால் அதை காட்சிப்படுத்தவில்லை.இசையில் இளைய  ராஜாவின் பாதிப்பு  உள்ளது,ஆனால் கண் ஒளி  இழந்த நண்பர்கள் இணைந்து பாடும் போது பின்னணி இசையில் வரும் இசைக்கு சமமான  கருவிகள் காட்சிப்படுத்தவில்லை,இப்படத்தின் ஒரே பலம் ஒளிப்பதிவு  மட்டுமே !!!
இருந்தாலும் இந்த அளவுக்கு வெற்றிகரமாக எடுத்துள்ள படத்தின் குழுவுக்கு
அம்ராம் திரை ஓவிய பட்டாளத்தின்  வாழ்த்துக்கள் !!!!
                                                                                                                                             
                                                                                                                           விமர்சனம் 
                                                                                                                                ஜெபா                                          
                                                           

2 comments:

  1. The film is very good . There is nothing to talk about the making of the film . Some stupids have no job but to comment on other ppls work

    ReplyDelete
  2. விமர்சனம் என்பது குறை கூறுவது என்று அர்த்தப்படுத்த வேண்டாம்:

    நல்ல இயக்குனர் விமர்ஷந்த்தை கேட்க வேண்டும் இல்லை என்றால் முன்னேற முடியாது !!!

    நானும் ஒரு இயக்குனர் தான் martina

    ReplyDelete