மாலை மயங்கும் நேரம்
குழந்தையின் அழுகுரல்
கீதமாய் ஒலிக்கின்றது
உறவினர்கள் புன்னகையோடு
கொஞ்சி மகிழ, கண் திறக்கும்
முயற்சியில் வருங்கால ராஜாத்தி
சிறந்த மருத்துவர் ஆக வேண்டும்
தந்தையின் கனவு
ஒழுக்கமுள்ள தாயாக வேண்டும்
தாயின் ஆசை
என்ன பெயர் வைக்கலாம்?
சகோதரனின் யோசனை
ஒரு தோழி கிடைத்து விட்டாள்
சகோதரியின் சந்தோசம்
நேர்த்தி கடன்கள் செய்ய வேண்டும்
பாட்டியின் கடமை
ஆசை அன்பு பாசம் செல்லம்
ஊட்டி வளர்கபட்ட ரோஜாவை
விவரம் அறியா மென்மையான
அவள் அழகிய மனதை
குதறும் மிருகங்களுக்கு
இறைவனின் பரிசு தான் என்னவோ? -ஷாலினி சாமுவேல்
http://www.ansarburney.org/womens_rights-violence.html

No comments:
Post a Comment